செய்திகள்

பிக் பாஸ் முடிந்தும் அடங்காத கவின் ஆர்மி!

20th Oct 2019 03:42 PM | Muthumari

ADVERTISEMENT

 

பிக் பாஸ் முடிந்து இரு வாரங்கள் ஆகியும் கவின் ரசிகர்கள் பிக் பாஸையும், கவினையும் விட்டபாடில்லை. அவ்வப்போது கவின் குறித்த ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி தொடங்கி, 105 நாட்களுடன் அக்டோபர் 5ம் தேதி நிறைவுற்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், பிக் பாஸ் சீசன்-3 டைட்டில் வின்னர் பட்டத்தை மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ் கைப்பற்றினார். 'ரன்னர் அப்'(இரண்டாம்) பட்டத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பெற்றார். 

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன்- 3 போட்டியாளர்களில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொண்டது 'சரவணன் மீனாட்சி' புகழ் 'கவின்' தான். நிகழ்ச்சியின் போது கவின் மீது எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுகள் குவிந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் செய்யப்பட்ட போதும், ரசிகர்கள் வாக்குகள் மூலமாக அவரைக் காப்பாற்றி வந்ததற்கான காரணம் என்ன என்று  இதுவரை பலரும் குழப்பத்தில்தான் இருக்கின்றனர். 

ADVERTISEMENT

பிக் பாஸ் சீசன் - 3 டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் முகேன்!

கவின் ஒவ்வொரு முறையும் பிக் பாஸ் வீட்டில் ஏதேனும் பிரச்னைக்கு ஆளாகும் போது, ரசிகர்கள் ட்விட்டரில் அவருக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகின. அதிலும், கவின் ரூ.5 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு வெளியேறிய பிறகு, நண்பர்களுக்காக விட்டுக்கொடுத்ததாகக் கூறி 'நட்பின் நாயகன் கவின்' என்று அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

இதுவரை அதிக முறை நாமினேட் செய்யப்பட்டவர், நாமினேஷனில் அதிக ஓட்டுகள் வாங்கியவர், பிக்பாஸ் டி.ஆர்.பி கிங் கவின் தான். அவர் இடம்பெறும் ப்ரோமோக்கள் அதிக பார்வையாளர்களைப் பெற்றும் சாதனை படைத்துள்ளதை விஜய் டிவியே தெளிவுபடுத்தியுள்ளது. 

பிக் பாஸ் இறுதி நிகழ்ச்சியில் கவினுக்கு 'கேம் சேஞ்சர்' விருது வழங்கப்பட்டது. 'கவின் மட்டும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்திருந்தால் இறுதிப்போட்டியில் பங்கேற்றிருப்பார். நிகழ்ச்சியின் முடிவுகள் கண்டிப்பாக மாறியிருக்கும்' என்று இறுதி நிகழ்ச்சியில் கமல் ஹாசனே கூறியிருந்தார். 

பிக் பாஸ் கொண்டாட்டம்: கவினுக்கு முக்கிய விருது வழங்கிய விஜய் டிவி! யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? 

பிக் பாஸ் முடிந்த பின்னரும் கவின் ஆர்மி, ஒவ்வொரு வாரமும் ஏதோ ஒரு காரணத்திற்காக கவின் பெயரை வைத்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் கவின் - லாஸ்லியா காதலுக்கு இடைஞ்சலாக இருந்ததாகக் கூறி இயக்குநர் சேரன் மீது கவின் ஆர்மி பல்வேறு விமர்சனங்களையும், கேள்விகளையும் முன்வைத்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இயக்குநர் சேரன் இதுகுறித்து விளக்கமளித்திருந்தார். அப்போது அவர், 'இனி கவின்- லாஸ் பெயரே எனது நாவில் வராது. என் பிரச்னைக்கு இனி யாரும் வர வேண்டாம்' என்று கூறியிருந்தார்.

'அன்பு அனாதை இல்லை' - உலக மக்களின் மனங்களை வென்ற பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகேன்!

மேலும், பிக்பாஸ் கொண்டாட்டத்திலும் கவின் தல-தளபதி என இரண்டு கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களும், டான்ஸ் ஆடுவது போன்ற குறும் விடியோக்களும் வைரலாகி வருகின்றன. 

இதையடுத்து, #KavinTimeToShine என்ற ஹேஷ்டேக்கை கவின் ஆர்மி ட்விட்டரில் இன்று காலை முதல் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

Tags : Kavin army
ADVERTISEMENT
ADVERTISEMENT