செய்திகள்

ரூ. 275 கோடி: அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ‘வார்’!

16th Oct 2019 03:52 PM | எழில்

ADVERTISEMENT

 

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சமீபத்தில் வெளியானது. முதல் நாளிலேயே இந்தியா முழுக்க ரூ. 53.35 கோடி வசூலித்தது. அதாவது ஹிந்தியில் ரூ. 51.60 கோடியும் தமிழ் மற்றும் தெலுங்கில் ரூ. 1.75 கோடியும் வசூலாகக் கிடைத்தன. இதன்மூலம் முதல் நாளன்று இந்தியாவில் அதிகமாக வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையைப் பெற்றது (பாகுபலி 2 படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 121 கோடி வசூலித்தது. ஹிந்தியில் ரூ. 41 கோடியும் தெலுங்கு + தமிழ் + மலையாளம் ஆகிய மொழிகளில் ரூ. 80 கோடியும் வசூலித்தது). மேலும்,  2019-ல், இந்தியாவில் வேகமாக ரூ. 200 கோடி வசூலித்த ஹிந்திப் படம் என்கிற பெருமையையும் பெற்றது. வார் படம் போலவே சஞ்சு, சுல்தான், டைகர் ஜிந்தா ஹை ஆகிய ஹிந்திப் படங்களும் முதல் ஏழு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்துள்ளன. (பாகுபலி 2 ஹிந்திப் படம் முதல் ஆறு நாள்களில் ரூ. 200 கோடி வசூலித்து சாதனை செய்தது. ஏழு நாள்களில் ரூ. 247 கோடி வசூலித்தது.)

இந்நிலையில் வார் படம் தற்போது ரூ. 275 கோடி வசூலைத் தொட்டுள்ளது. இதன்மூலம் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. நேற்றுவரை ஹிந்தியில் ரூ. 268 கோடியும் தமிழ், தெலுங்கில் ரூ. 13 கோடியும் பெற்று மொத்தமாக கிட்டத்தட்ட ரூ. 281 கோடி வசூலித்துள்ளது. இதன்மூலம் 2019-ல் வெளியான ஹிந்திப் படங்களில் இந்தியாவில் அதிகம் வசூலித்த படம் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளது. ரூ. 275 கோடி வசூலித்த கபீர் சிங் படத்தின் சாதனையை இந்தப் படம் தாண்டியுள்ளது. மேலும் இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹிந்திப் படங்களின் பட்டியலில் 10-ம் இடத்தைப் பிடித்துள்ளது வார்.

1. பாகுபலி 2 (ஹிந்தி)
2. டங்கல்
3. சஞ்சு
4. பிகே
5. டைகர் ஜிந்தா ஹை
6. பஜ்ரங்கி பைஜான்
7. பத்மாவத்
8. சுல்தான்
9. தூம் 3
10. வார். 

ADVERTISEMENT

இந்தப் பட்டியலில் உள்ள படங்களில் டைகர் ஜிந்தா ஹை, சுல்தான், தூம் 3, வார் ஆகிய நான்கு படங்களை யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT