செய்திகள்

முதல் நாளன்று வசூலில் சாதனை படைக்கப் போகிறதா இந்தப் படம்?

1st Oct 2019 11:33 AM | எழில்

ADVERTISEMENT

 

ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப், வாணி கபூர் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்- வார். இந்தப் படம் அக்டோபர் 2 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் வார் படம் முதல் நாளன்று வசூலில் சாதனை படைக்கும் என்கிற எதிர்பார்ப்பு பாலிவுட்டில் நிலவுகிறது.

சல்மான் நடிப்பில் வெளியான பாரத் படம் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 42.30 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு முதல் நாளன்று அதிகமாக வசூலித்த படம் இதுதான். இந்நிலையில் வார் படம் சல்மான் கான் படத்தின் சாதனையைத் தாண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

ADVERTISEMENT

வார் படம் விடுமுறை தினத்தில், நாளை வெளியாகிறது. இதனால் வரும் ஞாயிறு வரை இந்தப் படத்தின் வசூல் அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது. டிரெய்லர் மூலமாக ரசிகர்களிடையே வார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாகியுள்ளது. ஹிருத்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் ஆகிய இருவருக்குமிடையே நடைபெறும் மோதல் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் தொடர்ந்து விளம்பரப்படுத்துவதால் அதன் தாக்கம் வசூலில் பிரதிபலிக்கும் என்கிற நம்பிக்கையுடன் உள்ளது தயாரிப்பு நிறுவனம். இந்த வருடம் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம் அனைத்து மொழிகளிலும் முதல் நாளன்று இந்தியாவில் ரூ. 53.10 கோடி வசூலித்தது. அதையும் வார் பட வசூலில் முறியடிக்கும் என்று பலரும் இதன் முடிவை ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 

ADVERTISEMENT
ADVERTISEMENT