செய்திகள்

விஜய் - விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மலையாள நடிகர்!

1st Oct 2019 06:00 PM | எழில்

ADVERTISEMENT

 

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியானது. 

தளபதி 64 என்று தற்போதைக்குக் குறிப்பிடப்படும் இந்தப் படத்துக்கு இசை - அனிருத். இந்தப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் 64-வது படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. விஜய் - விஜய் சேதுபதி என இரு பெரும் நடிகர்கள் நடிக்கும் படம் என்பதால் தளபதி 64 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றிய மற்றொரு தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்த இவருக்கு அதிகக் கவனம் கிடைத்தது. ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT