செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168-ம் படத்தின் டைட்டில் இதுவா? நெட்டிசன்கள் ஆய்வு!

1st Nov 2019 04:49 PM | Snehalatha

ADVERTISEMENT

 

தர்பாரைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சிவாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ரஜினி 168 என்று அழைக்கப்பட்ட அந்தப் படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதில் ஜோதிகா, கீர்த்தி சுரேஷ், விவேக், சூரி உள்பட பலர் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

'V' என்ற எழுத்தில் ஆரம்பித்து 'M" என்ற எழுத்தில் முடியும் வகையில் தன் பட டைட்டில்களை (வீரம், விவேவகம், விஸ்வாசம்) வைக்கும் வழக்கம் உடைய இயக்குனர் சிவா தற்போது சூப்பர் ஸ்டார் படத்துக்கு என்ன தலைப்பு வைப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு இரு தரப்பு ரசிகர்களிடையேயும் நிலவி வருகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு 'வியூகம்' என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என்று பேசி வருகிறார்கள். ஆனால் இந்த வி செண்டிமெண்ட் சிவாவுக்கும் அஜித்துக்குமானது, அதனால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என பிரத்யேகமாக வேறொரு சிறப்பான தரமான டைட்டிலைதான் சிவா தேர்ந்தெடுப்பார் என்று நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT