மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி!

மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்டுள்ள 34 வயது நவனீத் கெளர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில்...
மக்களவைத் தேர்தலில் வென்று எம்.பி. ஆன கருணாஸ் பட கதாநாயகி!

மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களை வென்றது. காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியால் 6 இடங்களை மட்டுமே வெல்லமுடிந்தது. 

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகை நவ்னீத் கெளர் ராணா, நடந்துமுடிந்த மகாராஷ்டிர மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தமிழில் அரசாங்கம், கருணாஸ் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி ஆகிய படங்களில் நவ்னீத் கெளர் நடித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் 2-வது முறையாகப் போட்டியிட்டுள்ள 34 வயது நவனீத் கெளர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும் சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கிய யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக சுயேச்சையாகப் போட்டியிட்டார். சிவசேனா கட்சியைச் சேர்ந்த இருமுறை எம்.பியாக இருந்த ஆனந்த் ராவ் அட்சுலை 36,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.பி. ஆகியுள்ளார். யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சியை காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணிகள் ஆதரித்தன. 

2014-ல் இதே வேட்பாளரிடம் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, 1.37 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்ற நவனீத் கெளர், இந்தமுறை வெற்றிவாகை சூடியுள்ளார். பஞ்சாபியான நவ்னீத் கெளர், மும்பையில் படித்து வளர்ந்தவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com