ஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்க விவேக் ஓப்ராய் மறுப்பு!

ஐஸ்வர்யா ராய் தொடர்பான மீமை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கேட்க விவேக் ஓப்ராய் மறுத்துள்ளார். 
ஐஸ்வர்யா ராய் மீம் விவகாரம்: மன்னிப்பு கேட்க விவேக் ஓப்ராய் மறுப்பு!


தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் அநாகரிகமான மீம் ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். 

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த பதிவுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையம் விவேக் ஓப்ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், மகாராஷ்டிர மகளிர் ஆணையமும் விவேக் ஓப்ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

இதுதொடர்பான கண்டனங்கள் வலுத்துள்ள நிலையில், விவேக் ஓப்ராய் இதற்கு மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், 

"அந்த மீமில் இருப்பவர்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லாதபோது அரசியல்வாதிகள் தான் இதை அரசியலாக்க முயற்சிக்கின்றனர். அவர்கள் பிரச்னைகளுக்காக வேலை செய்ய மாட்டார்கள். ஆனால், பிரச்னையற்ற விஷயங்களில் அவர்கள் அரசியல் செய்ய தொடங்குவார்கள்.     

மேற்கு வங்கத்தில் ஒரு சகோதரி இருக்கிறார். அவர் மீம் போடுவர்களை சிறையில் அடைக்கிறார். தற்போது அவர்கள் விவேக் ஓப்ராயை சிறையில் அடைக்க கோரிக்கை விடுக்கிறார்கள். அவர்களால் எனது படத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், என்னை சிறையில் அடைக்க முயற்சிக்கிறார்கள். 

என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். எனக்கு மன்னிப்பு கேட்பதில் பிரச்னை இல்லை. ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்று கூறுங்கள். நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன். நான் தவறு செய்ததாக எனக்கு தெரியவில்லை. அதில் என்ன தவறு இருக்கிறது. யாரோ அந்த மீமை டிவீட் செய்தார்கள். நான் அதை பார்த்து சிரித்தேன். 

மகாராஷ்டிரா மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் நோட்டீஸுக்காக காத்திருக்கிறேன். நான் தவறு ஏதும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. அதனால், அவர்களை சந்தித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன். 

இதை ஏன் மிகப் பெரிய பிரச்னையாக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை? என்னை கேலி செய்யும் வகையிலான மீமை எனக்கு அனுப்பினார்கள். அந்த கிரியேட்டிவிடியை பாராட்டினேன். யாரேனும் உங்களை கேலி செய்தால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com