திங்கள்கிழமை 20 மே 2019

பின்னணி பாடகி எஸ்.ஜானகி அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

By  மைசூரு,| DIN | Published: 05th May 2019 01:17 AM

மைசூரில் அறுவை சிகிச்சை முடிந்து பின்னணி பாடகி எஸ்.ஜானகி வீடு திரும்பினார்.
 சென்னையில் வசித்து வரும் திரைப்பட பின்னணி பாடகி எஸ்.ஜானகி, சில நாள்களுக்கு முன்பு மைசூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகை தந்திருந்தார். 4 நாள்களுக்கு முன்பு வீட்டில் கால் இடறி கீழே விழுந்ததில் எஸ்.ஜானகியின் இடுப்பு எலும்பு முறிந்தது. இதைத்தொடர்ந்து, மைசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.ஜானகி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இடுப்பு எலும்பு முறிவை சரி செய்ய எஸ்.ஜானகிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை முடிந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை வீடு திரும்பினார்.
 அப்போது எஸ்.ஜானகி கூறியது: கர்நாடக மக்கள் என் மீது எப்போதும் அன்பைப் பொழிந்து வருகிறார்கள். அறுவை சிகிச்சைக்குப் பிறகு நான் நலமாக இருக்கிறேன். எனக்கு மைசூரு நகரை எப்போதும் பிடிக்கும். இந்நகரில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.
 வீட்டில் நுழையும்போது நான் கால் இடறி விழுந்துவிட்டேன். இதில் என் இடுப்பு எலும்பு முறிந்தது. அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

என் நட்பு வட்டம் மிகச் சிறியது: சன்னி லியோன் மனம் திறந்த பேட்டி
தமிழுக்கு வரும் வங்காள ஹீரோ
இந்நாள் சூப்பர் ஸ்டாரைவிட அதிக சம்பளம் கேட்கும் முன்னாள் சூப்பர் ஸ்டார்!
தம் அடிக்கும் காட்சியில் துணிச்சலாக நடித்த 'சாட்டை' நாயகி!
'கோமாளி'யான ஜெயம் ரவி! ஏன் தெரியுமா?