யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்

யாரும் இல்லாத மைதானத்தில் விளையாட முடியாது தலைவா. எல்லோரும் இருந்தால்தான் விளையாடமுடியும்...
யாரும் இல்லாத இடத்தை நான் பிடித்து விட்டேனா? : யோகி பாபு பதில்

முத்துக்குமரன் இயக்கத்தில் யோகி பாபு, கருணாகரன், ஜனனி, ரமேஷ் திலக் நடிப்பில் உருவாகியுள்ள படம் - தர்மபிரபு. கதாநாயகன் வேடத்தில் யோகி பாபு நடித்துள்ளார். 

இந்தப் படத்தில் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் யோகி பாபு பேசியதாவது:

சம்பளமாக ஒருநாளைக்கு ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் வாங்குவதாக ஞானவேல் ராஜா பேசியபோது சொன்னார். வருமான வரியே இன்னும் ரூ. 20 லட்சத்தையே செலுத்தமுடியாமல் இருக்கிறேன். எனக்கே பணம் வருவதில்லை. எல்லோரிடம் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே நான் ரூ. 10 லட்சம், ரூ. 15 லட்சம் எல்லாம் கேட்கவில்லை. இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளத்துக்கு வந்தவன் நான். எல்லாத் தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் அறிந்தவன். நேற்று கூட ஒரு இயக்குநர் தன்னுடைய குடும்ப விஷயங்களை என்னிடம் சொன்னார். ஊர் தஞ்சாவூர், நான் ஜெயித்தால் தான் என் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். நான் உனக்கு அண்ணன் போல என்று உடனே  தயாரிப்பாளரிடம் போனில் பேசினேன். சார் எனக்கான சம்பளத்தில் பாதி கொடுத்தால் போதும். அந்தப் பையனின் முன்னேற்றத்தைப் பாருங்கள் என்றேன். எனவே என்னைப் பற்றி, என்னைப் பிடிக்காதவர்கள் வெளியே நாலுவிதமாகச் சொல்வார்கள். அதுகுறித்து நேராக என்னிடம் கேட்டால்தான் பதில் கிடைக்கும். அதனால் நான் ரூ. 10 லட்சமோ, ரூ. 15 லட்சமோ கேட்கவில்லை. நான் உங்களில் ஒருவன் தான்.

யாரும் இல்லாத இடத்தைப் பிடித்தார் என என்னைச் சொல்கிறார்கள். யாரும் இல்லாத மைதானத்தில் விளையாட முடியாது தலைவா. எல்லோரும் இருந்தால்தான் விளையாடமுடியும். இருக்காங்க. அதில் விளையாடுகிறவர்களிடம் தானே திறமை உள்ளது. எனக்குச் சரியான படக்குழு அமையும்போது நான் சிக்ஸ் அடிக்கிறேன். அதனால் யாரும் இல்லாத இடத்தில் யாரும் விளையாடமுடியாது. இருந்தால்தான் விளையாடமுடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com