21 ஜூலை 2019

வாக்களிக்க இயலவில்லை: ரஜினிகாந்த்

DIN | Published: 23rd June 2019 12:02 AM

தபால் வாக்குச் சீட்டு குறிப்பிட்ட நேரத்தில் வந்து  சேராத காரணத்தால் தன்னால் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. ஏற்கெனவே திட்டமிட்ட படப்பிடிப்பில் வெளி மாநிலங்களில் உள்ள நடிகர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக தபால் வாக்கு சீட்டுக்கள் அனுப்பட்டு வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த், "தர்பார்' படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கி நடித்து வருகிறார். 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை பதிவிட்டுள்ள செய்தி: 

தற்போது படப்பிடிப்புக்காக மும்பையில் தங்கியிருக்கிறேன். எனது தபால் வாக்கு சனிக்கிழமை (ஜூன் 22) மாலை 6.45 மணியளவில்தான் வந்து சேர்ந்தது. இதனால், இந்தத் தேர்தலில் என்னால் வாக்களிக்க இயலவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இது சற்றும் எதிர்பாராதது. இதுபோல் நடந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்