21 ஜூலை 2019

தொகுப்பாளருக்குத் தக்க பதிலடி அளித்தாரா ராணா டகுபதி?: சமூகவலைத்தளத்தில் பரவும் விடியோ நிஜமா?

By எழில்| DIN | Published: 22nd June 2019 01:08 PM

 

கடந்த இரு நாள்களாகச் சமூகவலைத்தளங்களில் ராணா டகுபதியின் விடியோ ஒன்று பரவி வருகிறது.

ஸ்கூப்வூப் யூடியூப் பேட்டி ஒன்றில், தெலுங்கு நடிகர் ராணா டகுபதியிடம் தொகுப்பாளர் அக்ரீதா சைம் இப்படிக் கேள்வி கேட்கிறார்:

‘தென்னிந்தியப் படங்கள்’ என்று வட இந்தியர்கள் கூறுவது குறித்து எனக்குக் கிடைத்த அறிமுகம் - ரோஜா படம். என் பெற்றோர் அந்தப் படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அது ஒரு தமிழ்ப்படம். பிறகு, என் தந்தை ஒருநாள் பாகுபலி என்று சொல்லப்படக்கூடிய படத்தைப் பார்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு அது குறித்து ஒன்றும் தெரியாது. படம் பார்க்கும்போது இது நிஜமா என ஆச்சர்யப்பட்டேன். இந்தியாவின் இதரப் பகுதிகள் தென்னிந்தியா குறித்த கண்ணோட்டத்தை பாகுபலி படம் மாற்றிவிட்டது என எண்ணுகிறீர்களா? இந்தியாவில் நீங்கள் பல மொழிப் படங்களில் நடித்துள்ளீர்கள். நீங்கள் என்ன வித்தியாசம்...

இதற்கு ராணா டகுபதியின் பதில்: இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள், இதர மாநிலங்கள் குறித்து. எல்லாமே ஒரே மாதிரிதான் படமாக்குகிறோம். தெலுங்குப் படம் என்பதால் தெலுங்கில் பேசுகிறோம். ஆனால் இது அந்தத் திரையுலகம், இது இந்தத் திரையுலகம் என்று நாம் தான் பிரித்துவைத்துள்ளோம். எதன் அடிப்படையில் வித்தியாசமாக இருக்கிறது? ரஜினிகாந்த் எல்லா மொழிகளிலும் நடிக்கிறார். எல்லா மொழிகளிலும் அவர் படம் டப் ஆகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது, எதற்கும் எல்லை இல்லை என. நீங்களாக அதை உருவாக்கி வைப்பதால் மட்டுமே அப்படி உள்ளது என்று பதில் அளிக்கிறார்.

பேட்டியின் இந்தக் காணொளிதான் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. இந்த உரையாடலின் நடுவே தெலுங்குப் படங்களின் நகைச்சுவைக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் தென்னிந்தியத் திரையுலகை மட்டம் தட்டிய தொகுப்பாளர் அக்ரீதா சைமுக்குத் தக்க பதிலடி தந்துள்ளார் ராணா டகுபதி என்கிற உற்சாகப் பதிவுகளுடன் பலரும் இந்தக் காணொளியைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

ஆனால், கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பது இன்னொரு முறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் காணொளிகளையும் நம்பக்கூடாது என்பதற்கு இன்னொரு பாடமாகவும் உள்ளது.

‘தென்னிந்தியப் படங்கள்’ என்று வட இந்தியர்கள் கூறுவது குறித்து எனக்குக் கிடைத்த அறிமுகம் - ரோஜா படம். என் பெற்றோர்கள் அந்தப் படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அது ஒரு தமிழ்ப்படம். என் தந்தை ஒருநாள் பாகுபலி என்று சொல்லப்படக்கூடிய படத்தைப் பார்க்க வலியுறுத்தினார். அப்போது எனக்கு அது குறித்து ஒன்றும் தெரியாது. படம் பார்க்கும்போது இது நிஜமா என ஆச்சர்யப்பட்டேன். இந்தியாவின் இதரப் பகுதிகள் தென்னிந்தியா குறித்த கண்ணோட்டத்தை பாகுபலி படம் மாற்றிவிட்டது என எண்ணுகிறீர்களா

இந்த கேள்வியை அக்ரீதா சைம் கேட்டதென்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு, இதர மாநிலங்கள் குறித்து இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள்... என்று பதில் அளிக்கவில்லை ராணா டகுபதி.

பேட்டியின் யூடியூப் விடியோவைக் கவனியுங்கள். பாகுபலி பற்றிய கேள்வியை முதலிலேயே கேட்டுவிடுகிறார் அக்ரீதா சைம் (0.45). இந்தியாவின் இதரப் பகுதிகள் தென்னிந்தியா குறித்த கண்ணோட்டத்தை பாகுபலி படம் மாற்றிவிட்டது என எண்ணுகிறீர்களா என்கிற கேள்விக்கு ராணா டகுபதி அளித்த பதிலில், முதலில் ஆமாம் என்றே கூறுகிறார். பிறகு, அது எந்த மொழிப் படமாக இருந்தாலும், கதை என்று பார்க்கும்போது இந்தியத்தன்மை கொண்டது என்கிறார். பிறகு பாகுபலி படக்கதையை ராஜமெளலி சொன்ன விதம் என்று படத்தைப் பற்றி விரிவாகக் கூற ஆரம்பித்துவிடுகிறார். மற்றபடி அக்ரீதாவின் கேள்விக்கு ராணா டகுபதி கோபப்படவேயில்லை. ஆனால் சமூகவலைத்தளங்களில் பரவும் காணொளியில், பாகுபலி குறித்த கேள்விக்கு, இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள், இதர மாநிலங்கள் குறித்து என்று ராணா டகுபதி பதில் அளிப்பதாக எடிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் உண்மை வேறு என்பதை இந்த யூடியூப் விடியோவைப் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.

அதேசமயம், அது வேறு கேள்விக்கான பதில். வெவ்வேறு திரையுலகங்களில் நீங்கள் பணியாற்றியுள்ளீர்கள். அதில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள் என்கிற கேள்விக்குத்தான் (34.19), இந்தியர்கள் எந்தளவுக்கு முட்டாளாக உள்ளார்கள், இதர மாநிலங்கள் குறித்து என்று பதில் அளிக்கிறார் ராணா டகுபதி.

ஆனால், சமூகவலைத்தளங்களில் பரவும் விடியோவில், பாகுபலி - தென்னிந்திய சினிமா குறித்த வட இந்தியர்களின் பார்வை குறித்த கேள்விக்கு அப்படிச் சொன்னது போல மாற்றிப் போட்டுவிட்டார்கள். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்