21 ஜூலை 2019

நாளை முதல் ‘பிக் பாஸ்’: இதுதான் போட்டியாளர்களின் பட்டியலா?

By எழில்| DIN | Published: 22nd June 2019 03:44 PM

 

கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 3 நாளை முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த "பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்க இருக்கிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

இந்நிலையில் நாளைய பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்களின் குறித்த பல தகவல்கள் வெளியாகியுள்ளன. கீழ்க்கண்ட நடிகர்கள், நடிகைகள் பிக் பாஸ் 3 போட்டியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இதன் இறுதிப்பட்டியல் நாளை தான் அதிகாரபூர்வமாகத் தெரியவரும்.

நடிகர் ‘விசில்’ விக்கிரமாதித்யா
நடிகர் ‘பருத்தி வீரன்’ சரவணன்
நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்
நடிகை அபிராமி வெங்கடாசலம்
டான்ஸ் மாஸ்டர் சாண்டி
நடிகை ஜாங்கிரி மதுமிதா
நடிகை ஆல்யா மானசா
நடிகை மிருணாளினி
நடிகர் கவின்
இயக்குநர் சேரன்
நடிகை ‘கவன்’ ப்ரியா ராஜ்குமார்
நடிகர் மாஸ்டர் மகேந்திரன்
நடிகர் பாண்டியராஜன் மகன் பிருத்வி
மலேசிய நடிகர் முகன் ராவ்
நடிகை ஷெரின்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Bigg Boss Tamil 3 Kamal Haasan

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்