21 ஜூலை 2019

நாங்கள் எப்படிப் பிழைப்பது?: விஜய் சேதுபதி பட வெளியீடு குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!

By எழில்| DIN | Published: 22nd June 2019 03:04 PM

 

நேற்று வெளியாவதாக இருந்த விஜய் சேதுபதி நடித்த சிந்துபாத் படம், சட்டச்சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. இதையடுத்து இந்தப் படம் அடுத்த வாரம் ஜூன் 28 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார். பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். ஜூன் 28 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிந்துபாத் படம் திடீரென ஜூன் 28 அன்று வெளியாவதால், தன்னுடைய படத்தின் நிலைமை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியதாவது:

நட்சத்திரங்கள் நடிக்காத படங்களின் நிலைமை மோசமாக உள்ளது. மே 10 முதல் படத்தை வெளியிடத் தயாராக இருந்தோம். பெரிய நடிகர்களின் படங்களால் ஜூன் 21 அன்று படத்தைத் தள்ளிவைத்தோம். ஒரு பெரிய நடிகரின் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாவதாக அறிவித்தவுடன் நாங்கள் 28-ம் தேதிக்கு நகர்ந்தோம். இப்போது அவர்கள் 28-ம் தேதி வரவும் வாய்ப்புள்ளது. நாங்கள் எப்படிப் பிழைப்பது என்று விஜய் சேதுபதி ட்விட்டர் கணக்கை டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பிரச்னையில் அவரை ஏன் இழுக்கிறீர்கள் என ரசிகரின் கேள்விக்கு அளித்த பதிலில் - நான் விஜய் சேதுபதியைக் குறை கூறவில்லை. ஏன் மக்கள் தவறாக அர்த்தம் எடுத்துக்கொள்கிறீர்கள். அவரைத் தொலைப்பேசியில் அழைக்க முயற்சி செய்தேன். அவரைப் பிடிக்க முடியவில்லை.  அவர் எனக்கு நண்பர், நலம்விரும்பி. நான் அவரை ஏன் டேக் செய்தேன் என்பதைப் புரிந்துகொள்வார் என்று பதில் அளித்துள்ளார். 

அடுத்த ட்வீட்டில், திரைப்படங்களை இயக்க யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை :-). எனவே போராட்டத்தைப் பற்றி என்னால் புகார் செய்ய முடியாது. வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி, எனது பார்வையாளர்களிடமிருந்து வரும் கருத்தை அறிய காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்