21 ஜூலை 2019

நடிகர் சங்கத் தேர்தல் நடைபெறும் இடம் அறிவிப்பு

DIN | Published: 22nd June 2019 08:52 PM

 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல்  ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினர் ஒரு பிரிவாகவும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியினர் ஒரு பிரிவாகவும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி இந்த தேர்தலை தள்ளிவைத்து மாவட்ட சங்கங்களின் பதிவாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து திட்டமிட்டபடி  தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

தேர்தலை நடத்தாவிட்டால் நடிகர் சங்கத்துக்குப் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்படும்.  எனவே திட்டமிட்டபடி ஜூன் 23-ஆம் தேதியன்று தேர்தலை நடத்தவும் அதற்கு பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்று விஷால் தரப்பு மனு தாக்கல் செய்தது.

நடிகர் சங்கத்துக்கான தேர்தலை  ஜூன் 23-ஆம் தேதி திட்டமிட்டபடி பாதுகாப்பாக நடத்தலாம். ஆனால் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை வாக்கு எண்ணிக்கையையோ அல்லது முடிவுகளையோ வெளியிடக்கூடாது. வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டார்.

இந்நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் நீதமன்ற உத்தரவுப்படி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. மேலும், நடிகர் சங்கத் தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்க மயிலாப்பூர் காவல் துணை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

சர்ச்சைக்குள்ளான கொலையுதிர் காலம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹிட் அடித்த பாலிவுட் பட போஸ்டரை ‘பிட்’அடித்த பிகில்!
நல்ல சினிமாவை நேசிக்கும் புதுப்படைப்பாளிகளின் கவனத்துக்கு!
இயக்குநர் சிகரத்துக்கு மூன்று விழாக்கள்! 
தொட்டு விடும் தூரம்