புதன்கிழமை 21 ஆகஸ்ட் 2019

நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு

By Raghavendran| DIN | Published: 12th June 2019 12:23 PM

 

பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்துள்ளார். 

இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், இப்படத்தை இயக்கியுள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்டு 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Thala Ajith Nerkonda Paarvai Boney Kapoor Vidya Balan Shraddha Srinath

More from the section

பிக் பாஸ் மதுமிதா தற்கொலை மிரட்டல்?: காவல்துறையிடம் புகார் அளித்த விஜய் டிவி!
ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகவுள்ள தபாங் 3
ஸ்பைடர் மேன் வரிசைப் படங்களுக்கு ஆபத்து?: வருமானப் பகிர்வில் நேர்ந்த புதிய சிக்கல்!
அக்‌ஷய் குமார் நடித்த மிஷன் மங்கள்: திரை விமரிசனம்
32 வருடங்கள் காத்திருப்பு: கமலுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் விவேக்!