திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

சாமி சிலைக்கு முன்பு கவர்ச்சி புகைப்படம்: மீண்டும் சர்ச்சையில் இளம் நடிகை 

DIN | Published: 10th June 2019 08:06 PM

 

சென்னை: விநாயகர் சிலைக்கு முன்பு இருப்பது போல கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டதால், கோலிவுட் இளம் நடிகை ஒருவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தமிழில் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பின்னர் பிக் பாஸ் - சீஸன் 2 வில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பி, ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சில சமயங்களில் அவரது படங்களின் காரணமாக சிலசமயங்களில் அவருக்கு கடும் கண்டனங்களும் எழுவதுண்டு. எதிர்ப்பு, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சி படங்களை அவர் பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் விநாயகர் சிலைக்கு முன்பு இருப்பது போல கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டதால், யாஷிகா ஆனந்த மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்துக்கு பின்னால் விநாயகர் சிலை ஒன்று இருப்பதே இதற்கு காரணம். இருந்தபோதும் இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகப் பரவி  வருகிறது. படத்தை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

சாமி சிலைக்கு முன்னால் நின்று கவர்ச்சி போஸ் கொடுப்பதா? என்று யாஷிகாவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். ஒரு சிலர் யாஷிகாவுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். அவரது தளத்தில் இது ஒரு விவாதமாக மாறி உள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : kollywood yashika anand image lord ganesh controversy instagram debate

More from the section

கட் அவுட், பேனர் வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்
உச்சத்தை தொட்டிருக்கிறார்: பார்த்திபனுக்கு ரஜினி பாராட்டு
ஆஷஸ்: இங்கிலாந்து 382 ரன்கள் முன்னிலை
"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது
காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!