திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது: வடிவேலுவை விளாசிய இளம் இயக்குநர் 

DIN | Published: 10th June 2019 08:42 PM

 

சென்னை: உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது என்று இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட விவகாரத்தில் நடிகர் வடிவேலுவை, இளம் இயக்குநர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இயக்குநர் சிம்புதேவனுக்கும், நடிகர் வடிவேலு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமான, இம்சை அரசன் 24-ம் புலிகேசி படம் முடங்கியுள்ளது. 

இந்தப் படத்தை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதால், கடந்த 2 வருடங்களாக வடிவேலுவை தயாரிப்பாளர்கள் யாரும் புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை.

அதேசமயம் சிம்புதேவனையும், அப்படத்தின் தயாரிப்பாளரான  இயக்குனர் ஷங்கரையும் வடிவேலு சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில் உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது என்று இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட விவகாரத்தில் நடிகர் வடிவேலுவை, இளம் இயக்குநர் ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மூடர் கூடம் படத்தை இயக்கியவர் நவீன் ஷேக் தாவூத். இவர் இயக்குநர் சிம்புதேவனின் உதவி இயக்குநராக இருந்தவர்.  இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட விவகாரம் தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் சிம்புதேவன் சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார். சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை, ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.

நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது

உங்களால்தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை. அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்ததற்கு நீங்கள் சிம்புதேவன் மற்றும்  ஷங்கர்  இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : imsai arasan movie issues chimbu devan shankar vadivelu controversy moodar koodam naveen

More from the section

கட் அவுட், பேனர் வேண்டாம்: சூர்யா வேண்டுகோள்
உச்சத்தை தொட்டிருக்கிறார்: பார்த்திபனுக்கு ரஜினி பாராட்டு
ஆஷஸ்: இங்கிலாந்து 382 ரன்கள் முன்னிலை
"பரியேறும் பெருமாள்' திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது
காப்பான் படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியீடு!