செய்திகள்

தி லயன் கிங்: இந்தியாவில் ரூ. 100 கோடியைக் கண்ட வசூல் அரசன்!

30th Jul 2019 02:20 PM | எழில்

ADVERTISEMENT

 

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. 

லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2140 திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் இந்தியாவில் முதல் மூன்று நாள்களில் ரூ. 55 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தியாவில் முதல் வார இறுதியில் அதிகமாக வசூலித்த ஹாலிவுட் படங்களில் - அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படம் ரூ. 159 கோடியும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் ரூ. 94 கோடியும் வசூலித்த நிலையில் தி லயன் கிங் படம் ரூ. 55 கோடியுடன் 3-ம் இடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் தி லயன் கிங் படத்தின் வசூல் இந்தியாவில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் வெளியான முதல் வாரத்தில் ரூ. 82 கோடியும் இரண்டாவது வார இறுதியில் ரூ. 33 கோடியும் வசூலித்துள்ளது. இதன்மூலம் ஞாயிறு வரை கிட்டத்தட்ட ரூ. 115 கோடி வசூலித்துள்ளது. கடந்த ஞாயிறு மட்டும் ரூ. 15 கோடிக்கும் அதிகமான வசூலைக் கண்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்தியாவில் டிஸ்னி இந்தியா வெளியிட்ட படங்களில் ரூ. 100 கோடியைத் தொட்ட நான்காவது படம் இது. இதற்கு முன்பு தி ஜங்கிள் புக், அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆகிய படங்கள் இந்த இலக்கை எட்டியுள்ளன. 

அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் இந்தியாவில் மட்டும் ரூ. 367 கோடி வசூலை அடைந்து சாதனை படைத்தது. அதன் வசூலை தி லயன் கிங் படத்தால் நெருங்கமுடியாது என்றாலும் இந்தியாவில் அதிக வசூல் கண்ட ஹாலிவுட் படங்களில் ஒன்று என்கிற பெருமையை அடைந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT