செய்திகள்

வனிதாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய கமல்! பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி!

சினேகா

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீஸன் 3 விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. பதினாறு போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள். முதல் வாரத்தில் ஒருவரும் எவிக்ட் ஆகவில்லை. இந்நிலையில், இரண்டாவது வாரத்தில் ஃபாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இவர்தான் முதன்முதலில் பிக் பாஸ் வீட்டினுள் அடியெடுத்து வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து இந்த வாரம் யார் எலிமினேட் ஆவார்கள் என்று பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சனிக்கிழமை கமல்ஹாசன் சில பஞ்சாயத்துக்களை தீர்த்து வைத்தார். அதிலொன்றுதான் தர்ஷன் மற்றும் வனிதா பிரச்னை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று தர்ஷனை குறிப்பிட்டிருந்தார் வனிதா. அதை வருத்தத்துடன் பகிர்ந்த தர்ஷனின் பக்கம் தான் நின்றார் கமல் வனிதாவிடம் இதற்கு அவர் விளக்கம் கேட்ட போது அவர் வயதில் தர்ஷன் சிறியவன் என்பதால் அந்த அர்த்தத்தில் தான் அப்படிச் சொன்னேன் என்று பதில் சொன்னார் வனிதா. பாரதியாரின் அக்னிக் குஞ்சொன்று கண்டேன் கவிதை வரிகளை மேற்கோள் கூறினார் கமல். ‘வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?’ தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் பார்க்க முடியாது, சிறு பொறி ஒன்று போதும், பெரும் காட்டையே கொளுத்த. அது போலத்தான் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்றார் கமல். 

அதனைத் தொடர்ந்து மோகன் வைத்யா எவிக்ட் ஆகவிருப்பதாக கமல் ஒரு முன்குறிப்புடன் நாடகம் ஒன்றினை அரங்கேற்ற, மோகன் தான் வெளியேறப் போவதாக நினைத்து கண்ணீர்விட்டு, ஹோம்மேட்ஸ்களைக் கட்டிப் அணைத்து அழுதுவிட்டார். அதன்பின் கமல் நல்லா பாருங்கள் உங்கள் அட்டையை என்று கூறியபோதும் என் பெயரைத் தவிர வேறு எதுவும் எழுதியிருக்கவில்லையே என்றார் அப்பாவியாக. நீங்கள் எலிமினேட் ஆகவில்லை என்று கமல் சொன்னவுடன் தான் மோகன் வைத்யா மீண்டார். நெகிழ்ந்து போய் கமலுக்கு நன்றி கூறினார். மோகன் வைத்யா காப்பாற்றபட்ட நிலையில் அடுத்து யார் எலிமினேட் ஆகவிருக்கிறார்கள் என்ற கேள்வியுடன் சனிக்கிழமை பிக் பாஸ் நிறைவடைந்தது.

ஒரு வழியாக தப்பித்த மோகன் வைத்தியாவைத் தொடர்ந்து, ஞாயிறு பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா, மற்றும் சரவணன் போன்றோரும் காப்பாற்றப்பட்டனர். மீரா மிதூன் மற்றும் தர்ஷனுக்கு இடையே நிகழ்ந்த விவாதத்தை விசாரித்தார் கமல். பிக் பாஸ் வீட்டில் பெண்கள் காதலில் விழுவதும் ஆண்கள் அதை மறுப்பதும் தொடர்ந்து நடந்தேறும் ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது. தர்ஷனை விரும்புவதாக சொன்ன மீரா அவர் அதை மறுத்தும் விவாதத்தில் ஈடுபட்டு வருவதும் அதில் ஒரு அங்கம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாகிவிட்டனர் தர்ஷன் மற்றும் மீரா மிதுன். தர்ஷன் எப்போதுமே நியாயம் பேசும் நபராகவே அறியப்படுகிறார். ஆனால் அவர் வசமாக இப்படி சிக்கிவிட்டார் என்று தெரிகிறது. ஷெரினால் அவருக்கு பிரச்னை வரவில்லை. ஆனால் மீராவினால் வந்தது. தர்ஷன் யாரிடமும் ஃப்ளர்ட் பண்ணியது இல்லை. மீரா தான் மாட்டக் கூடாது என்பதால் தர்ஷனை மாட்டிவிடுகிறார். மீரா மிதூன் சொல்வதை மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ கமல் நம்பவில்லை

இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்ப்பார்த்த நிகழ்வு இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் என்பதே. வனிதா விஜய்குமார் மற்றும் மீரா மிதூன் இருவரில் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற நிலையில், அது வனிதாதான் என்று கமல் கார்டை காட்டியவுடன் வனிதாவுக்கு ஷாக் ஆகிவிட்டது. வனிதா போவாங்கன்னு அவரே எதிர்ப்பார்க்கவில்லை. இது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் ரேஷ்மா மிகவும் கதறிவிட்டார். சாக்‌ஷி ஆரம்பத்தில் வனிதாவிடம் தர்க்கம் செய்தாலும் அவர் எவிக்ட் ஆனவுடன் வருத்தத்தை தெரிவித்தார். மோகன் வைத்யா தேம்பி அழுதார். கமல் அப்போது வனிதாவை மற்றவர்களுக்குத் தெரியாமல் பார்வையாளர்கள் வரிசையில் உட்கார வைத்து எதுக்காக போயிருப்பாங்கன்னு நினைக்கிறீர்கள் என்று அனைவரையும் கேட்க, அவர்கள் ஒவ்வொருவரும் வனிதாவை பற்றி கூறத் தொடங்கினார்கள்.

வனிதா பார்வையாளர்களுடன் அமர்ந்து, தன்னைக் குறித்து பிக் பாஸ் போட்டியாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்கத் தொடங்கினார். பார்வையாளர்கள் வரிசையில் வனிதா இருப்பது தெரியாமல் அவரைப் பற்றி காரசாரமாக மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை உள்ளடக்கிய சம்பவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பிக் பாஸ் இன்மேட்ஸான சேரன், தர்ஷன், கவின், லாஸ்லியா, அபிராமி ஆகியோர் வனிதா பற்றிய குறைகளைத் தெரிவித்தனர். ஆனால் சாக்‌ஷி, ரேஷ்மா, ஷெரின் ஆகியோர் அவர் பற்றி பாசிட்டிவ் விஷயங்களைத் தெரிவித்தனர். அதிலும் ரேஷ்மா கூறியது வனிதாவை கண்கலங்க வைத்துவிட்டது.  மகள்களுக்காக யாருடைய துணையும் இன்றித் தனியே போராடும் பெண் வனிதா என ரேஷ்மா கூறினார். அதன் பின், வனிதாவை மேடைக்கு வரவழைத்த கமல் அவரிடம் குறைகளை திருத்திக் கொள்ளுமாறு கூறினார். வனிதா வெளியேறியவுடன் கமலை சந்தித்துப் பேசிய போது, போட்டியாளர்கள் அனைவரும் வெற்றியை நோக்கமாக கொண்டு மட்டும் இல்லாமல், நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், 'தனியே வாழும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். மன வலிமையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்காக அவர்களை எப்போதும் முன் நிறுத்தி வாழ்க்கையை வாழ கற்றுக் கொள்ளுங்கள், எவ்வளவோ கஷ்டங்கள் வரலாம் அதற்காக சூசைட் எல்லாம் பண்ணிக்காதீங்க’  என்று கண்கள் கலங்கியபடி உருக்கமாகப் பேசினார்.

பிக் பாஸ் வீட்டில் சாக்‌ஷி இனிமேல் டீம் லீட் பண்ணுவார் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT