மருத்துவரை மணந்தார் இயக்குநர் விஜய்

சமீபத்தில் தனது திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், நேற்று நடைபெற்ற திருமணத்தில் மருத்துவர் ஐஸ்வர்யாவை...
மருத்துவரை மணந்தார் இயக்குநர் விஜய்

ஐஸ்வர்யா என்கிற மருத்துவரைத் திருமணம் செய்துள்ளார் இயக்குநர் விஜய்.

சமீபத்தில் தனது திருமணம் குறித்து அறிக்கை வெளியிட்ட விஜய், நேற்று நடைபெற்ற திருமணத்தில் மருத்துவர் ஐஸ்வர்யாவை மணந்துள்ளார். இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் கலந்துகொண்டார்கள்.

இது இயக்குநர் விஜய்யின் 2-வது திருமணம் ஆகும். 2014-ல் நடிகை அமலா பாலை இயக்குநர் விஜய் திருமண செய்த நிலையில் இருவரும் 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள்.

இந்த வருடம் வாட்ச்மேன், தேவி 2 என விஜய் இயக்கிய இரு படங்கள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை விஜய் இயக்கவுள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கவுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com