செய்திகள்

பெரிய நடிகர்களின் படங்களில் தயாரிப்பாளர்கள் அரிதாகவே லாபம் பார்க்கிறார்கள்: லட்சுமி ராமகிருஷ்ணன்

4th Jul 2019 12:50 PM | எழில்

ADVERTISEMENT

 

நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், ஹவுஸ் ஓனர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி ஆகிய படங்களை இதற்கு முன்பு அவர் இயக்கியுள்ளார். பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், கிஷோர், விஜி சந்திரசேகர் போன்றோர் இப்படத்தில் முக்கியப் பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான். கடந்த வாரம் இந்தப் படம் வெளியானது.

ட்விட்டரில் ஹவுஸ் ஓனர் படத்துக்கு வந்த விமரிசனங்களை வெளியிட்டு, இவையெல்லாம் மதிப்புமிக்க பத்திரிகை நிறுவனங்கள். சாதாரண படத்துக்கு அவர்கள் இந்த ரேட்டிங்கைத் தரமாட்டார்கள். எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவ்வகைப் படங்களை ரசிக்க ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களுக்காக நான் படம் இயக்குவேன் என்று கூறியிருந்தார் ஹவுஸ் ஓனர் பட இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இதற்குப் பதில் அளித்த ஒரு ரசிகர், இதுபோன்ற படங்களினால் தயாரிப்பாளருக்கு என்ன லாபம் கிடைக்கும்? தயாரிப்பாளர் தொடர்ந்து நீடிக்க, வியாபாரம் தானே முக்கியம். உங்களுடைய படைப்பாற்றலை மதிக்கிறேன். ஆனால் அது தயாரிப்பாளரின் பணத்தில் செய்யக்கூடாது என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இதற்கு விளக்கமளித்த லட்சுமி ராமகிருஷ்ணன், ஆமாம். ஆனால் எந்தத் தயாரிப்பாளர் பணம் ஈட்டுகிறார் என்று சொல்லமுடியுமா? பெரிய நடிகர், அதிக வசூல் போன்றவை இருந்தாலும் தயாரிப்பாளர்கள் அரிதாகவே லாபம் பார்க்கிறார்கள். என்னுடைய படங்கள் குறைந்த செலவில் உருவாக்கப்படுபவை. பெரிய படங்களின் தயாரிப்பாளரை விடவும் என்னுடைய தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளார்கள் என்று கூறியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT