செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

உலகளவில் அங்கீகாரம்: பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்த ‘ரெளடி பேபி’ பாடலின் விடியோ!

By எழில்| DIN | Published: 17th January 2019 10:27 AM

 

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - மாரி 2. இதில் சாய் பல்லவி, வரலட்சுமி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் இடம்பெற்ற ரெளடி பேபி பாடலின் விடியோ சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இப்பாடலைக் கண்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை அளித்துள்ளார்கள். 

யூடியுபில் வெளியான நாள் முதல் ரசிகர்கள் இப்பாடலைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் இப்பாடலுக்கு யூடியூபில் இதுவரை 8 கோடியே 51 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.

இதுதவிர இப்பாடலின் விடியோவுக்கு இன்னொரு பெருமையும் கிடைத்துள்ளது. பில்போர்ட் யூடியூப் பட்டியலில் நான்காம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்துள்ளது.

 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

டோலிவுட் சின்னத்திரை, பெரியதிரை மைனர்களுக்கு ஒரு ஸ்ரீரெட்டி பத்தாது போல இருக்கே!
ராட்சசிக்கு அடுத்து ஜோதிகா நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
அபிராமி & முகன்: பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய காதல் ஜோடியா?
ஆகஸ்ட் 8-ல் வெளியாகவுள்ள அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை!
'தலைவன் இருக்கிறான்' 19 ஆண்டுகளுக்குப் பின் இணையும் கமல், ஏ.ஆர்.ரஹ்மான்!