சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தெலுங்கு நடிகை அனிஷாவைத் திருமணம் செய்யவுள்ளார் விஷால்: அதிகாரபூர்வ அறிவிப்பு! (படங்கள்)

By எழில்| DIN | Published: 16th January 2019 12:27 PM

 

நடிகர் விஷால், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டியைத் திருமணம் செய்யவுள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

ட்விட்டரில் விஷால் கூறியதாவது: மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அவருடைய பெயர் அனிஷா அல்லா. அவர் என் காதலுக்கு ஒப்புக்கொண்டுவிட்டார். இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. என் வாழ்வின் மிகப்பெரிய மாற்றம் இது. திருமணத் தேதியை விரைவில் அறிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். அனிஷாவும் விஷாலுடனான திருமணம் குறித்து பதிவு எழுதியுள்ளார். அர்ஜுன் ரெட்டி, பெல்லி சொப்புலு போன்ற தெலுங்குப் படங்களில் அனிஷா நடித்துள்ளார். 

ஒரு பேட்டியில் விஷால் கூறியதாவது: இந்த வருடம் அனிஷாவைத் திருமணம் செய்யவுள்ளேன். நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத் தேதிகள் இனிமேல் தான் முடிவு செய்யவேண்டும். இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று எங்களுடைய இரு குடும்பங்களும் சந்தித்து அடுத்தக்கட்டம் குறித்து பேசவுள்ளார்கள். இந்த வாரத்துக்குப் பிறகு தேதிகளை அறிவிக்கிறோம் என்று விஷால் கூறியுள்ளார்.

Tags : Vishal Arjun Reddy actress Anisha Alla

More from the section

பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
என் டி ஆருக்கு ஒருவேளை உணவு தராமல் புறக்கணித்தவர்கள் தான் அவரது மகன்கள்: பத்திரிகையாளர் பரபரப்பு புகார்!
15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!
விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்