வெள்ளிக்கிழமை 19 ஏப்ரல் 2019

நடிகை ரிச்சாவுக்கு அமெரிக்காவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது!

By எழில்| DIN | Published: 16th January 2019 11:15 AM

 

சிம்பு, தனுஷ் ஆகியோருடன் ஜோடியாக நடித்த நடிகை ரிச்சாவுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

2007-ல் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் வென்ற ரிச்சா கங்கோபாத்யாய், அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியர். 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாக அறிமுகமானவர், தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் மயக்கம் என்ன படத்தில் நடித்தார். சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் நடித்த ரிச்சா, பிறகு வரிசையாக தெலுங்குப் படங்களில் நடித்தார். கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், நடிப்பை விட்டு தான் விலகியுள்ளதாக ட்விட்டரில் அறிவித்தார் ரிச்சா. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது: திரைப்படங்களை விட்டு விலகி 5 வருடங்கள் ஆன பிறகும் நான் சினிமாவை விட்டு விலகிவிட்டேனா எனக் கேட்பதைப் பார்த்து வெறுப்பாக உள்ளது. நான் என் வாழ்வின் புதிய பயணத்தில் உள்ளேன். நடிப்பு குறித்த எந்த லட்சியமும் எனக்குக் கிடையாது. திருமணம் செய்துகொள்வதற்காக நடிப்பை விட்டு விலகியுள்ளீர்களா என்கிற கேள்வியும் வெறுப்படைய வைக்கிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு தொழில் சார்ந்த வேறு விருப்பங்கள் இருக்கக்கூடாதா? என்று கூறினார். அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ முடித்துள்ளார் ரிச்சா.

இந்நிலையில் அமெரிக்காவில் தனது காதலருடன் ரிச்சாவுக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவர் கூறியதாவது: ஜோ லங்கெல்லாவைக் கல்லூரியில் சந்தித்தேன். அற்புதமான இரு வருடங்கள். என் வாழ்வின் அடுத்தக்கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். தற்போது அவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற செய்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். திருமணத் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று கூறியுள்ளார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Richa Gangopadhyay

More from the section

சினிமாக்காரருக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என என் பெயரை நீக்கி விட்டார்களா?: ரமேஷ் கண்ணா ஆதங்கம்!
400 மில்லியன்: யூடியூப் தளத்தில் ரெளடி பேபி பாடல் விடியோ நிகழ்த்தியுள்ள புதிய சாதனை!
ஒரே நாளில் இரு இளம் நடிகைகள் கார் விபத்தில் மரணம்... டோலிவுட் அதிர்ச்சி!
ரஜினி நடிக்கும் தர்பார் பட வில்லன் இவர் தான்!
காதலியுடனான திருமண நிச்சயதார்த்தத்தை அறிவித்த மஹத்: யாஷிகா வாழ்த்து!