16 வருடங்களில் 96 தமிழ்ப் படங்களுக்குத் தடை விதித்த தணிக்கை வாரியம்!

2012-க்குப் பிறகுதான் படங்களுக்குத் தடை விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. 2010-ல்...
16 வருடங்களில் 96 தமிழ்ப் படங்களுக்குத் தடை விதித்த தணிக்கை வாரியம்!

16 வருடங்களில் 96 தமிழ்ப்படங்கள் உள்ளிட்ட 793 படங்களுக்குத் தடை விதித்துள்ளது மத்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம். 

லக்னோவைச் சேர்ந்த நுதன் தாக்குர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இத்தகவலைப் பெற்றுள்ளார். 

ஜனவரி 1, 2000 முதல் மார்ச் 31, 2016 வரை 793 படங்களுக்குத் தணிக்கைச் சான்றிதழ்கள் மறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 586 இந்தியப் படங்கள், 207 வெளிநாட்டுப் படங்கள்.

இந்தியப் படங்களில் 231 ஹிந்திப் படங்களுக்கும் 96 தமிழ்ப் படங்களுக்கும் 53 தெலுங்குப் படங்களுக்கும் தணிக்கைச் சான்றிதழ்கள் மறுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 2015-16 ஆண்டுகளில் மட்டும் 153 படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. 

2012-க்குப் பிறகுதான் படங்களுக்குத் தடை விதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. 2010-ல் 9, 2008-ல் 10, 2007-ல் 11 படங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் 2012-13-ல் 82 படங்களுக்கும் 2013-14-ல் 119 படங்களுக்கும் 2014-15-ல் 152 படங்களுக்கும் 2015-16-ல் 153 படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com