செய்திகள்

'மகிழ்ச்சியும், பொறுப்பும் அதிகரித்துள்ளது' விருது பெற்ற ராகவா லாரன்ஸ்

24th Dec 2019 02:14 PM

ADVERTISEMENT

 

நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவைக்காக கடந்த ஆண்டு அன்னை தெரசா விருது பெற்றார்.    5 ரூபாய் டாக்டர் என்று மக்களால் கொண்டாடப்பட்ட மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் பெயரில் வழங்கப்படும் முதல் விருதினை இந்த ஆண்டு பெறுகிறார்.

தாயன்பு ட்ரஸ்ட் சார்பில் சமூக சேவை செய்த பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இதில் மக்கள் சேவைக்காக நடிகர் ராகவா லாரன்ஸுக்கு விருது வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT

இது குறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், 'மதர் தெரஸா விருதை தொடர்ந்து மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருதை பெறுவதில் பெருமையடைகிறேன். நான் பிறந்த அதே ராயபுரத்தில் 5 ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரனின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி நடந்த விருதுகள் வழங்கும் விழாவில், எனக்கு மக்கள் மருத்துவர் டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் விருது கொடுத்திருக்கிறார்கள். சென்ற வருடம் அன்னை தெரசா விருது பெற்ற போது இருந்த மகிழ்ச்சியயை போல் இந்த விருதை பெறுவதிலும் பெருமையடைகிறேன். மக்கள் சேவைக்காக பெறும் விருதுகள் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும், ஒருபுறம் பொறுப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. நான் இந்த விருதை பெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT