செய்திகள்

ரஜினி - சிவா படம்: நாளை மறுநாள் முதல் படப்பிடிப்பு!

16th Dec 2019 02:58 PM

ADVERTISEMENT

 

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். தலைவர் 168 என்று இப்போதைக்குக் குறிப்பிடப்படும் இப்படத்துக்கு இசை - இமான். கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள்.  

கடந்த வாரம் பூஜை நடைபெற்ற நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்குகிறது. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பும் அதே பிலிம் சிட்டியில் தான் நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT

Tags : Rajinikanth
ADVERTISEMENT
ADVERTISEMENT