செய்திகள்

ஹிந்திப் படங்களைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த இந்தியப் படமாகத் தேர்வாகியுள்ள ராமின் பேரன்பு!

16th Dec 2019 05:29 PM | எழில்

ADVERTISEMENT

 

2019-ல் வெளிவந்த படங்களில், சிறந்த முதல் 10 இந்தியப் படங்களின் பட்டியலை புகழ்பெற்ற திரைப்பட இணையத்தளமான ஐஎம்டிபி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்ப் படமான ராம் இயக்கிய பேரன்பு, சிறந்த இந்தியப் படமாக அதிக ரேட்டிங்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

ராம் இயக்கத்தில் மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி போன்றோர் நடித்த படம் - பேரன்பு. தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்தார். இசை - யுவன் சங்கர் ராஜா.

பேரன்பு முதலிடமும் ஹிந்திப் படங்களான உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் மற்றும் கல்லி பாய் ஆகிய படங்கள் அடுத்த இரு இடங்களையும் பெற்றுள்ளன. 10-ம் இடத்தை மலையாளப் படமான லுசிஃபர் பெற்றுள்ளது. சர்வதேச அளவிலான பட்டியலில், சமீபத்தில் வெளியான ஜோக்கர் படம் முதலிடம் பெற்றுள்ளது. 2017-ம் ஆண்டு விஜய் சேதுபதி - மாதவன் நடித்த விக்ரம் வேதா படம் ஐஎம்டிபி பட்டியலில் சிறந்த இந்தியப் படமாகத் தேர்வானது.

ADVERTISEMENT

2019-ல் வெளியான இந்தியப் படங்களில் இந்த 10 படங்களும் ஐஎம்டிபி இணையத்தளத்தில் அதிக ரேட்டிங்குகளைப் பெற்றவை.

ஐஎம்டிபி: டாப் 10 பட்டியல்

1. பேரன்பு
2. உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் (Uri: The Surgical Strike)
3. கல்லி பாய் (Gully Boy)
4. ஆர்டிகள் 15 (Article 15)
5. சிச்சோரே (Chhichhore)
6. சூப்பர் 30 (Super 30)
7. பட்லா (Badla)
8. தி தாஷ்கெண்ட் ஃபைல்ஸ் (The Tashkent Files)
9. கேசரி (Kesari)
10. லுசிஃபர் (Lucifer)

Tags : Peranbu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT