செய்திகள்

மிஷ்கினின் சைக்கோ படத் தலைப்புக்குச் சிக்கல்?

16th Dec 2019 04:31 PM | எழில்

ADVERTISEMENT

 

மிஷ்கின் இயக்கியுள்ள சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனன், ராம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - இளையராஜா, ஒளிப்பதிவு - தன்வீர் மிர். 

இந்நிலையில் இப்படத்தின் தலைப்புக்கு அனுமதியளிக்க முடியாது என்று தணிக்கைக் குழு அனுமதி மறுத்துள்ளது. மனநல பாதிப்பு தொடர்பாக சில தணிக்கை விதிமுறைகள் உள்ளதால் தலைப்பை மாற்றும்படி மிஷ்கினிடம் தெரிவித்தார்கள். படத்திலும் ஒருசில காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. ஆனால் படத்துக்குப் பொருத்தமான தலைப்பு இதுதான் என்பதால் மேல்முறையீடு செய்தார் மிஷ்கின். ரிவைஸிங் கமிட்டி, மிஷ்கினின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு சைக்கோ படத்தலைப்புக்கு அனுமதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

சைக்கோ படம் இம்மாத இறுதியில் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT