செய்திகள்

61 வயதான மடோனாவின் இளம் காதலர் இவர்தான்!

16th Dec 2019 12:09 PM | sneha

ADVERTISEMENT

 

இசைப்பிரியர்கள் அல்லாதவர்களுக்கும் மடோனா என்ற பெயர் நிச்சயம் பரிச்சயமானதுதான். அமெரிக்க இசைக் கலைஞர், நடிகை, மற்றும் தொழிலதிபரான இவரது முழுப் பெயர் மடோனா லூயிஸ் சிக்கோனே (Madonna Louise Ciccone)

1958 ஆகஸ்ட் 16-ம் தேதி பிறந்த மடோனாவுக்கு தற்போது 61 வயது. புகழின் உச்சியில் இருக்கும் மடோனாவைச் சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அண்மையில் மடோனா நடனக் கலைஞரான அஹ்மாலிக் வில்லியம்ஸுடன் கிசுகிசுக்கப்படுகிறார். மியாமியில் தனது மகளுடன் ஓய்வெடுக்கச் சென்ற போது, இளம் காதலர் அஹ்மாலிக் வில்லியம்ஸையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் மடோனா. 

ADVERTISEMENT

61 வயதான இந்த நட்சத்திரம் 26 வயதான வில்லியம்ஸுடன் சில மாதங்களாக காணப்படுகிறார்.  அஹ்மாலிக் மடோனாவை விட மிக இளையவர், அதாவது அவரது வயதில் கிட்டத்தட்ட பாதி என்பது குறிப்பிடத்தக்கது. 

வில்லியம்ஸ் 2015 முதல் மடோனாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், ஆனால் மக்களும் ஊடகங்களும் இந்த ஆண்டுதான் அவர்களது உறவைப் பற்றி கிசுகிசுக்கத் தொடங்கினர். மடோனாவின் மியூசிக் விடியோ காட் கன்ட்ரோலில் அஹ்மாலிக் வில்லியம்ஸ் தோன்றினார். 

மடோனா குடும்பத்துக்கும் முக்கியத்துவம் தந்தவராகவே உள்ளார். அவரது மகளின் பெயர் லூர்ட்ஸ். அவருக்கு 23 வயதாகிறது. ரோகோ என்ற மகனும் உண்டு. தவிர நான்கு குழந்தைகளைத் தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார் மடோனா. 

மடோனாவுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு காதலர்கள் உண்டு. புகழ்பெற்ற இயக்குனர் கை ரிட்சி,  கியூபா தடகள வீரர் கார்லோஸ் ஆகியோரிடம் காதலியாக இருந்தார். பின்னர் இளம் வயது ஆண்கள், நடனக் கலைஞர்களை காதலித்துள்ளார். பிரஹிம் ஜலிபாட்,  திமோர் ஸ்டெஃபென்ஸ், மாடல் கெவின் சம்பாயோ தற்போது அஹ்மாலிக் என்று இந்தப் பட்டியல் நீளமானது.

காதலுக்கு கண்ணில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை வயதில்லை என்று சிலர் இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்போது கருத்துரையிட்டுள்ளனர். ஆனால் இன்னும் சிலர் இந்த வயதில் மடோனாவுக்கு இது தேவையா என்றும் விமரிசித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT