செய்திகள்

இந்த வாரம் வெளியாகவுள்ள ஆறு தமிழ்ப் படங்கள்!

16th Dec 2019 10:47 AM | எழில்

ADVERTISEMENT

 

கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி இந்த வாரம் ஆறு தமிழ்ப் படங்கள் வெளிவருகின்றன.

தம்பி, ஹீரோ, தபங் 3 (டப்பிங்), பரமு, கைலா, விருது ஆகிய படங்கள் வரும் வெள்ளியன்று வெளியாகிற நிலையில் தம்பி, ஹீரோ ஆகிய இரு படங்களுக்கும் வார இறுதியில் நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்த்தி - ஜோதிகா ஆகிய இருவரும் அக்கா, தம்பியாக நடித்துள்ள படம் - தம்பி. கார்த்தி, ஜோதிகா ஆகியோரின் தந்தையாக சத்யராஜ் நடித்துள்ளார். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ள இப்படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு, தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்தை இயக்கினார். இசை - கோவிந்த் வசந்தா. 

ADVERTISEMENT

கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ‘இரும்புத்திரை’ மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ஹீரோ. சிவகார்த்திகேயன், அர்ஜூன், பிரியதர்ஷன் - நடிகை லிசியின் மகள் கல்யாணி, அபே தியோல், இவானா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - யுவன் ஷங்கர் ராஜா.

 

Tags : Tamil releases
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT