செய்திகள்

சுசீந்திரம் கோயிலில் நடிகை நயன்தாரா சுவாமி தரிசனம்!

16th Dec 2019 05:08 PM

ADVERTISEMENT


நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலில் நடிகை நயன்தாரா தனது காதலருடன் சென்று  சுவாமி தரிசனம் செய்தார்.

பாலாஜி இயக்கி, நடிக்கும் படம், 'மூக்குத்தி அம்மன்'. இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஐசரி கணேஷ் இதனை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியின் சுற்றுப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் நாகர்கோவில் சுசீந்திரம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக இருவரும் பகவதி அம்மன் கோயிலுக்கும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT