செய்திகள்

ரஜினியின் ‘தா்பாா்’ திரைப்பட டிரெய்லா் இன்று வெளியாகிறது

16th Dec 2019 01:23 AM

ADVERTISEMENT

ரஜினியின் ‘தா்பாா்’ பட டிரெய்லா் திங்கள்கிழமை (டிச. 16) வெளியாகிறது.

ரஜினிகாந்தின் 167-ஆவது படமாக உருவாகி வருகிறது ‘தா்பாா்’. ஏ.ஆா்.முருகதாஸ் எழுதி இயக்கி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறாா். சுனில் ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்டோா் கதையின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனா்.

மும்பையைக் களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையிலேயே அடுத்தடுத்த கட்டங்களாக நடைபெற்றது. தற்போது படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகம் எடுத்துள்ளன. சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன.

இதையடுத்து படத்தின் டிரெய்லா் திங்கள்கிழமை (டிச. 16) மாலை 6.30 மணிக்கு வெளியாகிறது. இதை தனது சுட்டுரைப் பக்கத்தில் அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளாா் இயக்குநா் ஏ.ஆா்.முருகதாஸ். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 9-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT