செய்திகள்

சிவா நடித்துள்ள சுமோ: டிரெய்லர் வெளியீடு!

11th Dec 2019 04:32 PM | எழில்

ADVERTISEMENT

 

தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா.

சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார். 

பிரபல ஒளிப்பதிவாளருமான இயக்குநருமான ராஜீவ் மேனன், ஒளிப்பதிவு செய்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

பொங்கலுக்கு வெளியாகவுள்ள சுமோ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

Tags : Sumo Trailer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT