செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது ரஜினி - இயக்குநர் சிவா படம்!

11th Dec 2019 11:56 AM | எழில்

ADVERTISEMENT

 

தர்பாருக்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இது ரஜினியின் 168-வது படமாகும். 

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அடுத்ததாக, சூர்யா கதாநாயகனாக நடிக்கும் படத்தை அவர் இயக்கவிருந்தார். ஆனால், அதற்குப் பதிலாகத் தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சிவா. இப்படத்துக்கு இசை - இமான்.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, சூரி போன்றோர் நடிக்கிறார்கள். இந்நிலையில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT