செய்திகள்

பிறந்தநாள் அறிவிப்பு: மிதாலி ராஜ் வேடத்தில் நடிக்கும் தாப்சி

3rd Dec 2019 02:28 PM | எழில்

ADVERTISEMENT

 

37 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா்.  கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைச் சமீபத்தில் படைத்தாா். கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். இதுவரை 209 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.

மிதாலி ராஜ் இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதற்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிதாலி ராஜ் வேடத்தில் தாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குகிறார். சபாஷ் மித்து என இப்படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. வியாகாம்19 ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. 

ADVERTISEMENT

மிதாலி ராஜின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்த தருணங்களின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தாப்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT