செய்திகள்

நயா பைசாவும் வேண்டாம்: சர்ச்சையில் முடிந்த 2.0 பட சப்டைட்டில் சம்பள விவகாரம்!

29th Aug 2019 04:09 PM | எழில்

ADVERTISEMENT

 

2.0 படத்துக்கு சப் டைட்டில் செய்த விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் சப் டைட்டில் கலைஞர் ரேகா, தனக்கான ஊதியத்தைப் பெற மறுத்துள்ளார். 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படத்துக்கு சப்டைட்டில் செய்து கொடுத்தும் தனக்கு இன்னமும் ஊதியம் தரப்படவில்லை என அப்படத்துக்கு சப்டைட்டில் செய்த ரேக்ஸ் என்கிற ரேகா ட்விட்டரில் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு லைகா நிறுவனம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 

சப்டைட்டிலுக்கான எங்களுடைய பட்ஜெட் - ரூ. 50,000. ஆனால் ரேகா 2 லட்சம் கோரினார். அவருடைய விருப்பத்தின் பேரில் 2.0 படத்தின் பணிகளைத் தொடங்கினார். சம்பளம் குறித்து பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார். ஆனால் அவர் சொன்ன தொகை எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. பிறகு ஊடகங்ளிடம் சென்று எங்களைப் பற்றித் தவறாகப் பேசினார். 10 நாள்களுக்கு முன்பு அவரைத் தொடர்பு கொண்டு, சப்டைட்டிலுக்கான பட்ஜெட் தொகையை விடவும் அதிகமாக இருந்தபோதிலும், ரூ. 1 லட்சம் தருவதாகச் சொன்னோம். ஆனால் அதை ஏற்க மறுத்து ரூ. 2 லட்சம் கேட்டார் ரேகா. அது மார்க்கெட் ரேட் கிடையாது. நாங்கள் யாருக்கும் சம்பளப் பாக்கி வைப்பதில்லை. எங்கள் நற்பெயரைக் கெடுக்கவேண்டும் என்கிற காரணத்துக்காக ஊடகங்களிடம் எங்களைப் பற்றி புகார் அளித்துள்ளார். அவருக்கு ரூ. 1 லட்சம் அளிக்கத் தயாராக உள்ளோம் என்று விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

லைகா தன் மீது வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தனியாகப் பதில் அளித்துள்ள ரேகா, தனக்கு நயா பைசாவும் வேண்டாம் என்று தனக்கான ஊதியத்தை மறுத்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT