செய்திகள்

அழைக்கிறார் பிரபாஸ்... டார்லிங் ஃபேன்ஸுக்கு இன்ஸ்டா ஆஃபர்!

28th Aug 2019 04:59 PM | சரோஜினி

ADVERTISEMENT

 

நடிகர் பிரபாஸ் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் தீவிர பிரபாஸ் ரசிகர்களுக்கெல்லாம் ஒரு அழைப்பை வெளியிட்டிருக்கிறார். பிரபாஸை நேரில் சந்திக்க விரும்பும் ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பாக இருக்கலாம். தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரபாஸ் வெளியிட்டுள்ள காணொலியில், நேரில் சந்திக்க விரும்பும் ரசிகர்கள் தனது சாஹோ பட போஸ்டர்களில் ஏதாவது ஒன்றின் அருகில் நின்று செல்ஃபீ எடுத்து அதை அவரவர் இன்ஸ்டா பக்கங்களில் பதிவிட்டு, அப்பதிவில் பிரபாஸை டேக் செய்ய வேண்டும். அப்படி டேக் செய்தால் தன்னை சந்திக்க விரும்பும் ரசிகர்களில் கணிசமானவர்களை தானே தனிப்பட்ட முறையில் தேர்வு செய்து சந்திக்கவிருப்பதாக பிரபாஸ் அறிவித்திருக்கிறார். விருப்பமுள்ள ரசிகர்கள் பிரபாஸின் விண்ணப்பத்தை ஏற்று இன்ஸ்டாவில் டேக் செய்து பாருங்கள். பாகுபலியைப் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் சரி தான்.

பிரபாஸ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு...

 

ADVERTISEMENT

இது பிரபாஸின் டார்லிங் ரசிகர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் அழைப்பு. ஆர்வமிருப்பவர்கள் முயன்று பாருங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT