திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

கலைமாமணி விருதுகள்: பட்டியலில் விஜய் சேதுபதி பெயர்; மேடையில் அறிவிப்பில்லை!

DIN | Published: 14th August 2019 11:18 AM

 

திரைப்படம்,  இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கான கலைமாமணி விருதுகள் நேற்று அளிக்கப்பட்டன. 3 சவரன் எடையுள்ள பதக்கம், சான்றிதழ் அடங்கிய இந்த விருதுடன், பாரதி, பாலசரஸ்வதி, எம்.எஸ். சுப்புலட்சுமி ஆகியோர் பெயரிலான விருதுகளும் அளிக்கப்பட்டன.

இந்த விழாவில் 200 பேருக்கு கலைமாமணி விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். 

2017-ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய்சேதுபதியும் தேர்வு செய்யப்பட்டு கலைமாமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விருது வழங்கும் விழாவில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை. விழாவுக்கு அவர் வரவும் இல்லை.  பாடலாசிரியர் யுகபாரதியின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தபோதும் அவர் விழாவுக்கு வரவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Tamil Nadu Government Actor Vijay Sethupathi Kalaimamani awards Chief Minister Edappadi K Palaniswami

More from the section

பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?
அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்
நடிகை ரேகா செய்த முன்னேற்பாடு!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

கரிசனங்களின் குவியல்