செய்திகள்

தர்பாருக்குப் பின் ரஜினியின் அடுத்த மூவ் இதுதான்!

11th Aug 2019 01:17 PM

ADVERTISEMENT

ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' படத்தில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினியின் புதிய கெட்அப் சமீபத்தில் வெளியாகி டிரெண்டில் இடம் பிடித்தது.

இதற்கிடையில் தனது அடுத்த படத்திற்கான கதை கேட்பதிலும் ஆர்வம் காட்டி வருவதுடன் ஓரிரு இயக்குநர்களிடம் ஒன் லைன் கேட்டு அதை டெவலப் செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட மேலும் ஒன்றிரண்டு பேர் ரஜினியின் அடுத்த படம் இயக்கும் இயக்குநர்கள் பட்டியலில் இருக்கின்றனர். ஆனால் இன்னும் எந்த படம், யார் இயக்குநர் என்பதை முடிவு செய்யாமலிருக்கிறார்.

ADVERTISEMENT

ஒவ்வொரு படம் முடிந்தவுடன் இமயமலை செல்லும் ரஜினிகாந்த் 'தர்பார்' படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலை சென்று ஒரு வாரத்துக்கும் மேல் தியானத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறாராம். சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப புறப்படும் தேதியை முடிவு செய்து செப்டம்பர் வாக்கில் இமயமலைக்குச் செல்வார் என்று தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT