செய்திகள்

நேர்கொண்ட பார்வை: அஜித்துக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து

11th Aug 2019 01:23 AM

ADVERTISEMENT

பெண்களின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தும் வகையில் வெளிவந்துள்ள "நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துள்ள அஜித்துக்கு சூர்யா - ஜோதிகா பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'.  ஹிந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காக இந்தப் படம் வெளிவந்துள்ளது. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியானது. 

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த மாதிரியான கதையில் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரீமேக்கை தமிழுக்கு ஏற்றவாறு  மாற்றி இயக்கியதற்கும் இயக்குநர் வினோத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.இந்த நிலையில், 'நேர்கொண்ட பார்வை' படத்தைப் பார்த்த சூர்யாவும் ஜோதிகாவும் அஜித்துக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்கள் அனுப்பிய பூங்கொத்து புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT