திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

தேசிய விருதுகள்: தமிழைத் தவிர சாதித்த இதர தென்னிந்தியத் திரையுலகங்கள்!

By ச.ந. கண்ணன்| DIN | Published: 10th August 2019 01:16 PM

 

66-வது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் நேற்று அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வழக்கமாக ஏப்ரல் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியாகும்.  மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. விருதுக்குத் தேர்வான திரைப்படங்கள்,  நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் குறித்த அறிவிப்பை  விருது  நடுவர் குழுத் தலைவர் ராகுல் ரவய்ல் வெளியிட்டார்.

இந்த வருடம் தமிழுக்கு சிறந்த தமிழ்ப் படம் என்கிற விருதைத் தவிர வேறெந்த தேசிய விருதும் வழங்கப்படவில்லை. 

ஆனால் நமக்குத்தான் இந்த நிலை. இதர தென்னிந்தியத் திரையுலகங்கள் அனைத்துமே செம குஷியில் உள்ளன. தெலுங்கு, மலையாளம், கன்னடம்  என அனைத்தும் தேசிய விருதுகளை அள்ளியுள்ளன.

கன்னடம் - 10 தேசிய விருதுகள்

ஒன்றல்ல இரண்டல்ல, 10 தேசிய விருதுகள் என்கிற குஷியில் இருக்கிறார்கள் கன்னட சினிமா ரசிகர்கள். மனசோர் இயக்கிய நதிசரமி (Nathicharami) என்கிற கன்னடப் படம் 5 தேசிய விருதுகளை அள்ளியுள்ளது. 

சிறந்த கன்னடப் படம் - நதிசரமி 
சிறந்த பாடலாசிரியர் - மனசோர் (நதிசரமி) 
சிறந்த படத்தொகுப்பு - நாகேந்திரா கே. உஜ்ஜயினி (நதிசரமி) 
சிறந்த பாடகி - பிந்து மாலினி (நதிசரமி) 
நடுவர்களின் சிறப்பு விருது - ஸ்ருதி ஹரிஹரன் (நதிசரமி)

கடந்த வருடம் அனைவரையும் கவர்ந்த கன்னடப் படமான கேஜிஎஃப், 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. 

சிறந்த சண்டை அமைப்பு - கேஜிஎஃப்
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - கேஜிஎஃப்

சிறந்த தேசிய ஒருமைப்பாடுக்கான நர்கீஸ் தத் விருது - ஒண்டல்லா இரடல்லா
சிறந்த குழந்தை நட்சத்திரம் - ரோஹித் பாண்டவபுரா (ஒண்டல்லா இரடல்லா)
சிறந்த குழந்தைகள் படம் - சர்காரி.. (SARKARI HIRIYA PRATHAMIKA SHALE KASARGODU)

தெலுங்கு - 7 தேசிய விருதுகள்

சிறந்த நடிகை - கீர்த்தி சுரேஷ்
சிறந்த தெலுங்குப் படம் - மகாநடி
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - ஏவ் (AWE)
சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ரஞ்சித் (ஏவ்)
சிறந்த ஆடை வடிவமைப்பு - மகாநடி
சிறந்த ஒலி அமைப்பு - ரங்கஸ்தலம்
சிறந்த திரைக்கதை - ராகுல் ரவிந்திரன் (ஷி அர்ஜூன் ல சோ)

மலையாளம் - 7 தேசிய விருதுகள்

சிறந்த விமரிசகர்: பிளைஸ் ஜானி 
சிறந்த திரைப்படப் புத்தகம் - மெளன ப்ரதான்போலே (எஸ். ஜெயச்சந்திரன் நாயர்)
நடுவர்களின் சிறப்பு விருது: ஜோஜூ ஜார்ஜ் (ஜோஸப்)
நடுவர்களின் சிறப்பு விருது: சாவித்ரி (சுடானி ஃப்ரம் நைஜீரியா)
சிறந்த மலையாளப் படம் -  சுடானி ஃப்ரம் நைஜீரியா
சிறந்த கலை இயக்கம் - கம்மரா சம்பவம்
சிறந்த ஒளிப்பதிவாளர் - ஒலு

தமிழ் - 1 தேசிய விருது

சிறந்த தமிழ்ப் படம் - பாரம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

பிக் பாஸ் வீட்டிலிருந்து மதுமிதா ஏன் வெளியேறினார்? பிக் பாஸ் செய்தது சரியா தவறா?
அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்
நடிகை ரேகா செய்த முன்னேற்பாடு!

ரோஜா மலரே!- குமாரி சச்சு
 

கரிசனங்களின் குவியல்