சினிமாக்காரருக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என என் பெயரை நீக்கி விட்டார்களா?: ரமேஷ் கண்ணா ஆதங்கம்!

சினிமாக்காரர் என்பதால் மற்றொரு சினிமாக்காரருக்கு மட்டும்தான் வாக்களிப்பார் என என் ஓட்டை...
சினிமாக்காரருக்கு மட்டும்தான் வாக்களிப்பேன் என என் பெயரை நீக்கி விட்டார்களா?: ரமேஷ் கண்ணா ஆதங்கம்!

தமிழகம், கர்நாடகம், மகாராஷ்டிரம் உள்பட 11 மாநிலங்கள், யூனியன் பிரதேசமான புதுச்சேரி என ஒட்டுமொத்தமாக 95 மக்களவை தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்டத் தேர்தல்  நடைபெற்று வருகிறது. தமிழகம் (38), கர்நாடகம் (14), மகாராஷ்டிரம் (10), உத்தரப் பிரதேசம் (8), அஸ்ஸாம் (5), பிகார் (5), ஒடிஸா (5), சத்தீஸ்கர் (3), மேற்கு வங்கம் (3), ஜம்மு-காஷ்மீர் (2), மணிப்பூர் (1)  ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தம் 15.8 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள இத்தேர்தலில், சுமார் 1,600 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவரால் இந்தமுறை வாக்களிக்கமுடியாமல் போனது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது:

ஒரு குடிமகனின் கடமை ஓட்டுப் போடுவதுதான் என்று தேர்தல் ஆணையம் நன்கு விளம்பரம் செய்கிறது. அதே உத்வேகத்துடன் காலை 6 மணிக்கு வாக்குச்சாவடிக்குச் சென்றேன். என்னிடம் வாக்காளர் அட்டையும் உள்ளது. கிட்டத்தட்ட நான்கைந்து தேர்தலில் அதே இடத்தில்தான் வாக்களித்தேன். முதல் ஆளாக காலை 6 மணிக்கு வாக்களிக்க நிற்கிறேன். 7 மணிக்குப் பிறகு சொல்கிறார்கள், ஸாரி சார்,  உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று. என்ன காரணம், என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளதே என்றேன். அது சரிதான், ஆனால் பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என்றார்கள். என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வேண்டும் இல்லையா? சர்காரில் 49 ஏ குறித்து மக்களுக்குத் தெரிகிறது. அதேபோல இதற்கும் ஒரு படம் வந்தால் தான் செய்வீர்களா? அதே தெருவில், அதே வீட்டில் உள்ள என் மனைவிக்கு ஓட்டு உள்ளது. ஆனால் எனக்கில்லை. இதன்மூலம் மக்களுக்கு வெறுப்புதான் ஏற்படும். தவறாமல் ஓட்டுப் போடுங்கள் என்று சொன்னால் எப்படி ஓட்டுப் போட்டுவார்கள். புதிய வாக்காளர்களும் புதிய தலைமுறையோ ஓட்டுப் போடமாட்டார்கள். புதிய தலைவர்கள் வரமாட்டார்கள். கட்சிக்காரர்கள் மட்டும்தான் ஓட்டுப் போடுவார்கள். சினிமாக்காரர் என்பதால் மற்றொரு சினிமாக்காரருக்கு மட்டும்தான் வாக்களிப்பார் என என் ஓட்டை நீக்கிவிட்டார்களா என்கிற சந்தேகம் உள்ளது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com