சனிக்கிழமை 23 பிப்ரவரி 2019

தொடரும் ரஜினி - ஷங்கர் வெற்றிக்கூட்டணி: முதல் வாரத்தில் ரூ. 500 கோடி வசூலை எட்டி 2.0 படம் சாதனை!

By எழில்| DIN | Published: 06th December 2018 10:52 AM

 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் வெளியான முதல் வாரத்தில் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இத்தகவலை லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழில் உருவான ஒரு படம், இந்தளவுக்கு வசூல் செய்திருப்பது இதுவே முதல்முறை. ரஜினி நடித்த படங்களிலும் அதிகமாக வசூலித்திருப்பது 2.0தான். இந்த வகையில் ரஜினி - ஷங்கர் கூட்டணி அமைந்தாலே அந்தப் படம் வசூலில் சாதனை படைக்கும் என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

More from the section

விஜய் சேதுபதி நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் பட டிரெய்லர் வெளியீடு!
பிரபல தெலுங்கு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார்
கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்! (படங்கள்)
விஸ்வாசம் படத்துக்குத் தமிழ்நாட்டில் கிடைத்த வசூல்: தயாரிப்பாளர் அளித்த அதிகாரபூர்வத் தகவல்!
இமைக்கா நொடிகள் இயக்குநருடன் கைகோத்துள்ள விக்ரம்