சினிமா

பிருந்தா மாஸ்டர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

30th Jul 2022 05:21 PM

ADVERTISEMENT

பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர் பிருந்தா இரண்டாம் முறையாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அப்படத்தின் பெயர் தக்ஸ் (Thugs).

சந்தோஷ் சிவனின் ஹிந்தி திரைப்படமான ‘மும்பைக்கர்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி, விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹாவும் தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே. சுரேஷும் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பிரவீன் ஆண்டனி எடிட்டிங். ஒரே ஷெட்டியூலில் எடுக்கப்பட்ட படமாகும். இதில் முனிஷ்காந்த முக்கியமான வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல் சொல்லப்படுகிறது. இரண்டு சண்டைப் பயிற்சியாளர்கள் இதில் பணிபுரிந்துள்ளனர். 

ADVERTISEMENT

கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT