சினிமா

500 கோடி பார்வைகளை கடந்த புஷ்பா பட ஆல்பம்

17th Jul 2022 12:00 PM

ADVERTISEMENT

 

இந்திய சினிமா வரலாற்றிலே முதல்முறையாக ஒரு படத்தின் ஆல்பம் 500 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது புஷ்பா பட ஆல்பம்.

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வருவாய் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. 

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா புஷ்பா படம் இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக  இந்தப் படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்கள் முக்கிய காரணியாக அமைந்தது. மேலும் சமந்தாவின் நடனமும் முக்கியமான வியாபார காரணியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என புஷ்பா பாடலுக்கு நடனமாடும் விடியோவைப் பகிரும் அளவுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றது.

ADVERTISEMENT

இந்திய சினிமா வரலாற்றிலே முதல்முறையாக ஒரு படத்தின் ஆல்பம் 500 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT