சினிமா

வெற்றிமாறன் எழுத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் திரைப்பட போஸ்டர் வெளியீடு

24th Jun 2021 09:47 PM

ADVERTISEMENT

இயக்குநர் வெற்றிமாறன் எழுத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கி நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியானது.

இயக்குநர் வெற்றிமாறனின் கதை, வசனத்தில் உருவாகி வரும் படம் அதிகாரம். இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிவருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதை நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் போஸ்டர் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தத் திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT