சினிமா

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறவிப்பு

24th Feb 2021 09:27 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ‘தலைவி’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.

விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

ADVERTISEMENT

கரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் பெற்ற நிலையில், இன்று ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தியேட்டர்களில் தலைவி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்தத் தகவலை படத்தின் நாயகியான கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT