சினிமா

நடிகை ராதிகாவுக்கு கரோனா

7th Apr 2021 04:00 PM

ADVERTISEMENT


சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த  நடிகை ராதிகா சரத்குமார் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. 

இதனிடையே தனது கணவர் சரத்குமார், கமல்ஹாசன் மற்றும் சமக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை ராதிகா பிரசாரம் மேற்கொண்டார். 

நேற்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், சரத் குமாருடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதனால் காசோலை மோசடி வழக்கில் இன்று நீதிமன்றத்திலும் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : ராதிகா சரத்குமார் COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT