சினிமா

நடிகர் ஜெய் பிறந்தநாள்: இன்ப அதிர்ச்சியளித்த சிம்பு!

7th Apr 2021 04:39 PM

ADVERTISEMENT

நடிகர் ஜெய் பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்திற்கு நேரடியாக சென்று கேக் வெட்டி நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் பரவலாக பரவி வருகின்றன. அதனை ஷேர் செய்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பகவதி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக அறிமுகமான ஜெய், கோவா, எங்கேயும் எப்போதும், ஜருகண்டி, கேப்மாரி உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இதனிடையே இன்று அவர் தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவரது ரசிகர்கள் நேரிலும், சமூக வலைதளத்திலும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சிம்பு ஜெய் வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்து தெரிவித்தார்.

ADVERTISEMENT

அவரது வீட்டில் கேக் வெட்டி ஜெய்-யின் குடும்பத்துடன் அவரது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ஜெய் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சிம்புவின் வருகை எதிர்பாராதது. மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எனக்காக உங்கள் நேரத்தை செலவிட்டமைக்கு மிகுந்த நன்றி. இந்த நாளை சிறப்பாக மாற்றியதற்காக நன்றி நண்பா என்று பதிவிட்டுள்ளார். 

 

Tags : Silambarasan surprise
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT